Our Recent Posts

டைனொசோர் (Dinosaur)

Posted on June 9th, 2015

அமெரிக்காவிலுள்ள ஆய்வாளர்கள் புதிய டைனொசோர் (Dinosaur) இனம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

ட்ரைசெர்ராடாப்ஸ் (Triceratops) பிரிவைச் சேர்ந்த இந்த டைனொசோர் ஐந்து மீட்டர் நீளம் வளரக்கூடியதாகவும், இரண்டாயிரத்து ஐநூறு கிலோ பருமன் கொண்டதாகவும் இருந்துள்ளது.

மிகப் பெரிய மூக்கும் அளவுக்கதிகமான நீளம் கொண்ட கொம்பும் இதற்கு இருந்துள்ளது.

(read more…)


அறிவியல் வானின் விடிவெள்ளி பிப்ரவரி 28 சர்.சி.வி.ராமன் தேசிய அறிவியல் தினம்

Posted on June 9th, 2015

ஒரு நிமிடம்… மின்சாரமோ, தொலைபேசியோ இல்லாத இந்த உலகை சற்று கற்பனை செய்து பாருங்கள். அப்பா! என மலைப்பாக இருக்கிறதா? நினைத்துப்பார்க்கவே முடியாதபடி அயர்ச்சியாக இருக்கிறதா?ஆம்! அறிவியல் இல்லா உலகம் அதிர்ச்சி தரும்.ஏனென்றால் உங்கள் நாகரீகத்தின் அடிப்படை அறிவியல் தான். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நம் வாழ்க்கையை மேம்படுத்த அறிவியல் நம்மோடு துணையாக பயணிக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் அறிவியல் அறிஞர்கள்.தமிழக மண்ணில் பிறந்த அறிவியல் மேதை சர்.சி.வி.ராமனின் நுண்ணறிவினையும், திறமையையும், ஆராய்ச்சிகளின் சிறப்பையும் உணர்ந்து 1930ஆம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. தேசத்தலைவர்கள் மற்றும் விடுதலைப் போராட்ட தியாகிகளைக் கொண்டாடுவது போலவே அறிவியல் மேதைகளையும் போற்ற வேண்டும் என்ற அடிப்படையில் இந்திய அரசு சர்.சி.வி.ராமன் நோபல் பரிசு பெற்ற தினமான பிப்ரவரி 28ம் தேதியை 1987ம் ஆண்டு தேசிய அறிவியல் தினமாக அறிவித்தது.

(read more…)